Wednesday, September 11, 2024
Home » தபால்மூல வாக்களிப்பு; விண்ணப்பங்களை ஏற்கும் பணி இன்றுடன் நிறைவு

தபால்மூல வாக்களிப்பு; விண்ணப்பங்களை ஏற்கும் பணி இன்றுடன் நிறைவு

- இதுவரை 14 வேட்பாளர்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது

by Prashahini
August 5, 2024 2:24 pm 0 comment

ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் (05) நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்களை இன்று (05) உரிய மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் சமர்ப்பிக்க முடியுமெனவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் அடுத்த மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

தேர்தலை முன்னிட்டு இதுவரை 14 வேட்பாளர்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

08 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் மற்றுமொரு அரசியல் கட்சியும் 05 சுயேட்சை வேட்பாளர்களும் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

எதிர்வரும் 15 ஆம் திகதி காலை 9 மணி முதல் முற்பகல் 11.30 வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, www.elections.gov.lk எனும் இணையத்தள முகவரிக்கு பிரவேசிப்பதன் ஊடாக வாக்களிக்க தகுதிபெற்றுள்ளமையை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த தளத்தில் வாக்காளர் பதிவுத் தகவல் என்பதை தெரிவு செய்து தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் மாவட்டத்தை பதிவு செய்து உறுதிப்படுத்தலாமெனவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x