252
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று (04) கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் இத்தீர்மானதை அக்கட்சி எடுத்துள்ளது.
முக்கியமான 3 நிபந்தனைகளின் கீழ் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதென இதன்போது முடிவு செய்யப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.