154
அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட துரை மதியுகராஜா ஐக்கிய மக்கள் சக்தி கண்டி மாவட்ட அமைப்பாளராக சஜித் பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய மாகாண சபையின் உப தவிசாளராக இரண்டு தடவைகளும், அவைத் தலைவராக பதவி வகித்தவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரும், 25 வருடங்களுக்கும் மேலாக கண்டி மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதான அமைப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
நேற்று (04) ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா- ஹங்குராங்கெத்தையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாய மாநாட்டின் போது இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.