நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் செய்த தவறுகளாலேயே கடந்த 2022 .05.09 தமது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாக அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே,அவர் இதனை தெரிவித்தார்.இங்கு உரையாற்றிய அவர்:
காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை தாக்குமாறுகூட்டங்களை நடத்தினர்.இதனால் எழுந்த சர்ச்சைகள் இறுதியில் கலவரமாக வெடித்து எங்கள் வீடுகளும் தாக்கப்பட்டன.
அனுராதபுரம் மாவட்ட மக்களின் அபிலாக்ஷைகளுக்கு முன்னுரிமை அளித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தேன். பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீண்டுள்ளது. தற்போதய முன்னேற்றத்தை தொடர வேண்டுமாயின் ஜனாதிபதி தலைமையில் மீண்டும் அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும். சாதாரண மக்களின் விருப்பம் இது. போராட்டத்தின் போது அரசியல் வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமை சிறந்தது என நாமல் தெரிவித்துள்ள கருத்து முறையற்றது.
நாமல் ராஜபக்ஷ வரலாறு தெரியாமல் அரசியல் தெரியாமல் கருத்துக்களை தெரிவிப்பது கவலைக்குரியது. வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்