நாட்டில் நிலவிய அசாதாரண காலங்களில் கொல்லப்பட்ட,காயமடைந்த மற்றும் காணாமலான
அக்கரைப்பற்று முஸ்லிம்களை நினைவுகூரும் நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை (06) நடைபெறவுள்ளது.
அக்கரைப்பற்று சுகதா ஞாபகார்த்த அமைப்பினர்
இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர். அக்கரைப்பற்று ஜூம்ஆ பட்டினப்பள்ளிவாசலில் அஸர் தொழுகையின் பின்னர் அமைப்பின் தலைவர் எம்.ரீ. ஜமால்தீன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறும். இந்நிகழ்வில் கத்தமுல் குர் ஆன் தமாம், சுகதாக்கள் ஞாபார்த்த உரை, சுகதாக்கள் ஞாபகார்த்த ஆவணப்படுத்தலுக்கான விளக்க உரை,“துஆப்பிராத்தனை”ஆகியன இடம்பெறவுள்ளன.
கொலைசெய்யப்பட்ட ஊனமுற்ற,காயமடைந்த முஸ்லிம்களின் விபரங்ககளையும் படங்களையும் உள்ளடக்கிய“சாட்சியமாகும் உயிர்களின் கதை” எனும் நூலும் வெளியிடப்படும்.முஸ்லிம் தேச இழப்பீட்டு ஆய்வு மையத்தினர் இந்நூலை தொகுத்துள்ளனர்.
விழா தொடர்பான எல்லா ஒழுங்குகளையும் அமைப்பின் செயலாளர் எம்.எல்.அப்துல் மஜீத்த் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுவருகின்றனர்.
அட்டாளைச்சேனை குறூப் நிருபர்