ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பவர்களால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பிளவுபடவில்லை எனவும் கட்சியைப் பற்றி கவலைப்படாது தனிப்பட்ட நலன்களுக்காகச் செயற்பட்ட ஒரு சிலரின், செயற்பாடுகளாலேயே கட்சி பிளவுபட்டதாகவும்
அமைச்சர் பிரசன்னரணதுங்க தெரிவித்தார்.
இவ்வாறான சிலர்,பணத்துக்காக கட்சிக்கு துரோகம் இழைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இரத்தினபுரி மாவட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுடன் (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்:
கட்சியைப் பிளவுபடுத்தாமல் ஒன்றித்து செயற்பட நான் விரும்புகிறேன்.பிளவை ஏற்படுத்தியவர்கள் 2022 இல், ரணிலை நியமிக்காமல் டலஸை நியமித்திருக்க வேண்டும்.
நாடு ஆபத்தான நிலையிலிருக்கையில் சவால்களை ஏற்றுக்கொண்டவர் ரணில். ஆனால், சஜித் பிரேமதாச, ஹர்ஷ எம்.பி. ஆகியோர் சவால்களை பொறுப்பேற்க முடியாது என்று ஒதுங்கிவிட்டனர்.
தொகுதி அமைப்பாளர் பதவி பற்றிப் பேசும் நேரம் இதுவல்ல.நாட்டைப்பற்றியே சிந்திக்க வேண்டும் என்றார்.