Home » தேர்தல் முறைகேடுகள்: மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை

தேர்தல் முறைகேடுகள்: மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை

by damith
August 5, 2024 8:45 am 0 comment

ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெறும் முறைகேடுகளை கண்காணிக்கவும் அது குறித்த தகவல்களை பெறுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக 0767914696 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது 0112505566 என்ற தொலைநகல் இலக்கத்திற்கு இதுதொடர்பான முறைப்பாடுகளை, சமர்ப்பிக்க முடியும் எனவும் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை நடத்தும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் வழிகாட்டுதல்கள் ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x