ஜனாதிபதித் தேர்தலுக்கான அச்சக செலவினங்கள் இம்முறை வெகுவாக அதிகரிக்கக்கூடும் என, அரசாங்க அச்சகத்தின் தலைவர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை அந்த செலவினங்கள் மூன்று மடங்காக அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அச்சு நடவடிக்கைகளுக்காக 800 மில்லியன் ரூபாவை செலவிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டின் நீளம் 27 அங்குலமாக காணப்பட்டது. இம்முறை அதன் நீளம் மேலும் அதிகரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்பார்க்கும் வகையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், வாக்குச் சீட்டின் நீளமும் அதிகரிக்கும் என்றும் அதற்கிணங்க அச்சீட்டு செலவுகளும் அதற்கு ஏற்ப, அதிகரிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்