தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் கடந்த மாதம் (14) ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர்கள் வீடு திரும்பவில்லை என அவர்களின் பெற்றோர்களால் முறைப்பாடு ஒன்று கடந்த மாதம் (15) ஆம் திகதி திங்கட்கிழமை தலவாக்கலை பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது .
இதன் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட தலவாக்கலை பொலிஸார் நான்கு சிறுவர்களையும் கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிந்த நிலையில் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்படி காணாமல் போனதாக கூறப்படும் நான்கு சிறுவர்களின் ஒருவரின் உறவினர் கொழும்பில் தொழில் புரிந்த நிறுவனம் ஒன்றில் குறித்த நான்கு சிறுவர்களுக்கு தொழில் மற்றும் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு தடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் தொலைபேசி இலக்கங்களையும் , உரையாடல்களையும் அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இவர்கள் நேற்று (03) கண்டுபிடிக்கப்பட்டு இன்று (04) தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமந்த பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் தொழில் பெற்றுக் கொடுத்த பெண்ணும், குறித்த சிறுவர்களை காணாது போல் சிறுவர்களின் பெற்றோரிடம் பல தடவைகள் தொலைபேசி உரையாடல் மூலம் நடித்து வந்துள்ளார் என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், குறித்த 4 சிறுவர்களையும் தொழிலுக்கு அழைத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்களும், ஒரு ஆணும் அடங்கலாக 3 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்து நாளை (05) நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் 4உ சிறுவர்களையும் பொலிஸார் தனித்தனியாக விசாரணை செய்தபின்னர் இவர்களின் பெற்றோர்களை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து ஒப்படைக்கப்படவுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
டி.சந்ரு