உக்ரைனின் கலாச்சாரம் மற்றும் தகவல் கொள்கை பிரதி அமைச்சர் அனஸ்டாசியா பொன்டர், டெல்லியில் கடந்த வாரம் WION செய்திச் சேவை உடனான பிரத்தியேக நேர்காணலின் போது பிரதமர் மோடி தனது நாட்டுக்கு விஜயம் செய்வது குறித்து நம்பிக்கை தெரிவித்தார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர் , “இந்தியப் பிரதமர் விரைவில் உக்ரைனுக்கு வருவார் என்று நான் தனிப்பட்ட முறையில் உறுதியாக நம்புகிறேன். உக்ரைனின் தற்போதைய உண்மையான நிலைமையை அவருக்கு எடுத்துரைக்க இதுவே ஒரே வழி ” என்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவில் நடைபெறும் உலக பாரம்பரியக் குழுக் கூட்டத்தில் பிரதி அமைச்சர் பங்கேற்றார். ஐரோப்பிய நாட்டில் உள்ள வரலாற்றுத் தளங்களில் போரின் தாக்கம் குறித்து உக்ரைன் ஆதரவுடன் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தியாவுடன் கலாச்சார உரையாடலை பிதி அமைச்சர் வலியுறுத்தினார். “நமது நாடுகளுக்கு இடையே ஒரு கலாச்சார உரையாடலைக் கண்டறிந்தால், அது நமது நாடுகளுக்கு நமது ஒத்துழைப்பில் ஆழமாகச் செல்ல உதவும் . கலாச்சார அமைச்சரை அல்லது பிரதி அமைச்சரை எமது நாட்டுக்கு அழைப்பதில் நான் மகிழ்ச்சியடைவேன். அவர்கள் உக்ரைனின் தற்போயை உண்மை நிலைமையை தங்கள் கண்களால் பார்க்க வேண்டும்.”பிரதி கலாச்சார அமைச்சர் யோகா, பொலிவுட் மற்றும் புகழ்பெற்ற இந்திய பாடலான “ஜிம்மி ஜிம்மி, அஜா அஜா” பற்றியும் இந்த நேர்காணலின் போது கருத்துத் தெரிவித்தார்.