சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரஜினியின் படத்தை விரும்பி பார்ப்பார்கள்.அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த படையப்பா படத்தில் நடித்த குழந்தை பற்றிய விவரங்கள் பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.அதுவும் இந்த படத்தில் இடம் பிடித்த என் பேரு படையப்பா என்ற பாடல் வரிகளில் ரஜினியின் இளமைக்காலத்தை சுட்டி காட்டக் கூடிய குழந்தையின் முகம் ஒன்று காட்டப்படும். அந்த குழந்தை யார் என்பதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.படையப்பா படத்தில் இடம் பிடித்த என் பேரு படையப்பா இள வட்ட நடையப்பா என்ற பாடல் பாட்டி தொட்டி எங்கும் கேட்கப்பட்டு ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்ட பாடல்களில் ஒன்றாக விளங்கியது.
இந்த பாடல் வரிகளில் பாசமுள்ள குழந்தை அப்பா என்ற வரிகள் இடம் பிடித்திருக்கும். முடிந்தால் நீங்கள் அதை ஒரு முறை பாடி பார்த்தால் உங்களுக்கு தெரியும்.அப்படி குழந்தை அப்பா என்று வரும் வரிகள் வரும் போது விசுவலாக ஒரு சிறு குழந்தையின் முகத்தை காட்டி இருப்பார்கள். அதன் பிறகு தான் ரஜினியின் முகம் வரும்.என்ன பாடலின் இடையில் வரும் குழந்தை தற்போது சீரியல்களில் கலக்கி வரும் மிகச்சிறந்த ஹீரோயினியாக வளர்ந்து இருக்கிறார் அவர் தான் ஹேமா பிந்து.ஹேமா பிந்து தற்போது பல சீரியல்களில் நடித்து அசத்தி வருகிறார் என்பது உங்களுக்கு தெரியும்.
கே எஸ் ரவிக்குமாருக்கும் ரஜினிகாந்த்க்கும் இடையே ஒரு நட்பை உருவாக்க இந்த படம் மிக முக்கிய காரணமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தான் இருவரும் மிகச் சிறந்த நண்பர்களாக மாறினார்கள்.