318
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக, பிரபல தொழில் அதிபரும், தாயக மக்கள் கட்சியின் தலைவருமான திலித் ஜயவீர, அறிவிக்கப்பட்டுள்ளார்.
சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் தற்போது இடம்பெற்று வரும் அக்கூட்டமைப்பின் மாநாட்டில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவினால் அவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.