முன்னணி கிரிப்டோகரன்சி (Cryptocurrency)பரிமாற்றம் மற்றும் Web3 நிறுவனமான Bitget, இலங்கையில் அதன் பயனர்களுக்கு கிரிப்டோ மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இலங்கையில் தனது முதல் சந்திப்பு குறித்த அறிவிப்பை விடுப்பதில் மகிழ்ச்சி அடைகின்றது.
இச் சந்திப்பானது, ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி, மாலை 6 மணி முதல், Mont Blanc, NH Collection, Colombo இல் நடைபெறும்.
இச் சந்திப்பானது முக்கிய கருத்துருவாக்கத் தலைவர்கள் (KOLகள்), செல்வாக்கு செலுத்துபவர்கள், கிரிப்டோ வர்த்தகர்கள் மற்றும் பிளாக்செயின் ஆர்வலர்கள் உட்பட முழு கிரிப்டோ சமூகமும் பங்குபற்றக் கூடிய திறந்த சந்திப்பாக அமையும்.
இதில் கலந்துகொள்பவர்களுக்கு கிரிப்டோகரன்சி, பிளாக்செயின் மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் குறித்த கலந்துரையாடல்களில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைக்கும்.
இந்த நிகழ்வில் Bitget இன் நோக்கம் மற்றும் சேவைகள் பற்றிய பயனுள்ள தரவுகளை வழங்கும் நோக்கில் Bitget குறித்த ஒரு அறிமுக நிகழ்வும் நடைபெறும்.
ஈடுபாட்டுடன் கூடிய கலந்துரையாடல்களுக்கு மேலதிகமாக, இந்த சந்திப்பானது, ஒத்த எண்ணம் கொண்ட தனிநபர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு தனித்துவமான வலையமைப்பை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பையும் பங்குபற்றுபவர்களுக்கு வழங்கும். இந்த உற்சாகமான செய்திகளுக்கு மேலதிகமாக, இந்த மாலைப் பொழுதை தகவல்களால் மற்றும் வெகுமதிகளால் நிறைந்த மாலையாக மாற்றும் நோக்கில் வெற்றிகொள்ளக்கூடிய பல பரிசுகள் பற்றியும் இங்கு அறிவிக்கப்படும்.
“இலங்கையில் டிஜிட்டல் நாணயங்களில் அதிகரித்து வரும் ஆர்வம், உள்ளூர் சமூகத்துடன் எமக்கு இணைவதற்கு ஒரு சிறப்பான வாய்ப்பை வழங்குவதோடு, கிரிப்டோ தளம் பற்றிய ஆழமான புரிதலை வழங்கவும் வழிவகுக்கும். இந்த ஆண்டின்
குறிப்பிடத்தக்க வளர்ச்சியானது, எங்கள் பயனர்கள் அனைவருக்கும் உயர்மட்ட வர்த்தக தீர்வுகள் மற்றும் சேவைகளை வழங்க வேண்டும் என்ற எங்கள் நோக்கத்துடன் ஒன்றிக்கிறது” என்று Bitget இன் உலகளாவிய மக்கள் தொடர்புத் தலைவர் சிம்ரன் அல்போன்சா தெரிவித்தார்.
Bitget இன் சந்திப்புகளானது, உள்ளூர் சமூகங்களுடன் இணைவதற்கான மற்றும் கிரிப்டோ குறித்து அறிவூட்டுவதற்கான, பரிமாற்ற நிறுவனத்தின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். வேகமாக வளரும் பரிமாற்ற நிறுவனமாக உள்ள Bitget 2024 இன் முதல் பாதியில் அதனது அனைத்துத் தயாரிப்புகளிலும் வலுவான பயனர் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
2024 இரண்டாம் பகுதியில் Bitget, இணையதள போக்குவரத்தில் கிட்டத்தட்ட 50% உயர்வைக் கொண்ட கணிசமான அதிகரிப்பைக் கண்டதுடன், அது
மாதாந்திர பார்வையாளர்களின் எண்ணிக்கையை 10 மில்லியன் எனும் ஏற்றத்திற்கும் கொண்டு வந்தது. பரிமாற்ற நிறுவனத்தின் நிதி வரவு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்ததோடு, Bitget Proof-of-Reserve (PoR) பக்கத்தின் தரவுகளின் அடிப்படையில்,
பயனர்களின் BTC, USDT மற்றும் ETH அளவு முறையே 73%, 80% மற்றும் 153% அதிகரித்ததோடு,
தோராயமாக $700 மில்லியன் மூலதன வரவையும் கொண்டுவந்தது.
இந்த வளர்ச்சியானது தளத்திற்கு 2.9 மில்லியன் புதிய பயனர்களின் வரவின் மூலம் ஏற்பட்டதோடு, நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும் உலகத் தரம் வாய்ந்த கிரிப்டோ வர்த்தக தீர்வுகளுடனும் ஒன்றித்தது. Q1 இல் $28 பில்லியனில் இருந்து Q2 இல் $32 பில்லியனாக Bitget இல் ஸ்பாட் டிரேடிங் அளவு 10%க்கு மேல் அதிகரித்துள்ளது.
மேலதிகமாக, CCData இன் சமீபத்திய H2 அவுட்லுக் அறிக்கையானது CEX களில், Bitget மிகப்பெரிய சந்தைப்பங்கு வளர்ச்சியை H2 2023 முதல் H1 2024 வரை 38.4% ஆகக் கொண்டிருந்தது என்பதைக் காட்டியது. இதேநேரம்
ஏனைய போட்டியாளர்கள் சிறிய வீழ்ச்சியைச் சந்தித்திருந்தனர்.
ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள் அறிவு-பகிர்வுக்காகவும் மற்றும் வலையமைப்பிற்காகவும் இந்த மாலைப்பொழுதில் Bitget மற்றும் பரந்த கிரிப்டோ சமூகத்தில் சேரலாம்.
பிட்ஜெட் பற்றி
பிட்ஜெட் என்பது 2018 இல் நிறுவப்பட்ட உலகின் முன்னணி கிரிப்டோகரன்சி பரிமாற்ற மற்றும் Web3 நிறுவனம் ஆகும்.
100+ நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 25 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கு சேவை செய்து வரும் Bitget பரிமாற்றமானது பயனர்களுக்கு அதன் முன்னோடி நகல் வர்த்தக அம்சம் மற்றும் பிற வர்த்தக தீர்வுகளுடன் திறம்பட வர்த்தகம் செய்ய உதவுகிறது.
முன்பு BitKeep என்று அழைக்கப்பட்ட Bitget வாலட் என்பது விரிவான Web3 தீர்வுகள் மற்றும் வாலட் செயல்பாடு, இடமாற்று, NFT சந்தை தளம், DApp உலாவி மற்றும் பல அம்சங்களை உள்ளடக்கிய உலகத் தரம் வாய்ந்த multi-chain கிரிப்டோ வாலட் ஆக காணப்படுகின்றது.
அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லயனல் மெஸ்ஸி மற்றும் துருக்கிய தேசிய விளையாட்டு வீரர்கள் பஸ் டோசுன்
Çavuşoğlu (மல்யுத்த உலக சாம்பியன்), Samet Gümüş (குத்துச்சண்டை தங்கப் பதக்கம் வென்றவர்) மற்றும் İlkin Aydın
(கைப்பந்து தேசிய அணி) போன்ற நம்பகமான பங்குதாரர்களுடன் இணைந்து கிரிப்டோவில் ஈடுபடுவதற்காக தனிநபர்களை Bitget ஊக்குவிக்கிறது.