175
துறையூர் நட்புறவு சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மின்னொளி கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சாய்ந்தமருது வேஸ்ட் இலவன் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
சம்மாந்துறை பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) இரவு நடைபெற்ற இச்சுற்றுத் தொடரின் இறுதிப்போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் அணிக்கு எதிராக வேஸ்ட் இலவன் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.
இத்தொடரின் மூன்றாமிடத்திற்கான கிண்ணத்தை அட்டாளைச்சேனை நியூ ஸ்டார் அணி வென்றதோடு இக் கழகத்தின் வீரர் அஸ்லம் தொடர் நாயகனாகத் தெரிவானார்.
ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்