Home » செவ்விளநீர் மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்களின் ஆக்கிரமிப்பு

செவ்விளநீர் மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்களின் ஆக்கிரமிப்பு

by gayan
August 3, 2024 12:00 pm 0 comment

தெங்கு மற்றும் செவ்விளநீர் உற்பத்திகளில் பரவி வரும் வெள்ளை ஈ பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்காக விவசாயத் திணைக்களத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட என்கார்சிஸ் குவாடலூபே (Encarcis Guadeloupae) அடங்கிய 3 இலட்சம் பொதிகள் இவ்வருடம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்தளது.

வெள்ளை ஈ தாக்கத்தால் ஏற்பட்ட சேதம் தற்போது மேல் மாகாணம் மற்றும் வேறு சில பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக ஓரளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை ஈ மஞ்சள் நிறத்தில் அதிகம் ஈர்க்கப்படுவதால், தென்னையை விட செவ்விளநீர் உற்பத்திகளுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது.

வெள்ளை ஈ தாக்கத்தால் சேதத்துக்குள்ளான 1,051,323 தென்னை மற்றும் செவ்விளநீர் மரங்கள் பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x