Home » கல்முனை ஆதார வைத்தியசாலையில் அளப்பரிய பணியாற்றும் என்பு முறிவு நெரிவு சிகிச்சைப் பிரிவு

கல்முனை ஆதார வைத்தியசாலையில் அளப்பரிய பணியாற்றும் என்பு முறிவு நெரிவு சிகிச்சைப் பிரிவு

by gayan
August 3, 2024 6:00 am 0 comment

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இயங்கும் என்பு முறிவு நெரிவு பிரிவு( orthopetic unit ) கடந்த காலங்களை விட மிகவும் சிறப்பாக பல வசதிகளுடன் இயங்கி வருகின்றது.

‘சி’ ஆம் (C Arm) என்று சொல்லப்படுகிற நவீனரக எக்ஸ் கதிர் கருவியுடன் சிறப்பாக சத்திர சிகிச்சைகள் இடம்பெற்று வருகின்றன.

பிரபல என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி பத்திநாதன் கலாவேந்தன் தலைமையிலான குழுவினர் வார்ட்டில் இயங்கி வருகின்றார்கள்.

அங்கு ஆண்கள், பெண்களுக்கு என்று தனியான சத்திரசிகிச்சைக் கூடம் 24 மணிநேரமும் தயார் நிலையில் இருக்கின்றது. அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் எங்குமில்லாத சிற்றி நவீன எக்ஸ் கதிர் இயந்திரமும் உள்ளது.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா .முரளீஸ்வரனின் முழு முயற்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த என்புமுறிவு நெரிவு சிகிச்சைப் பிரிவு இன்றைய பணிப்பாளர் ெடாக்டர் ரங்கா சந்திரசேகரவின் வழிகாட்டலில் மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது.

தற்போது பணிப்பாளருக்காக பதில் கடமை புரியும் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ் ராஜேந்திரனிடம் இது தொடர்பாக நேரில் சென்று வினவிய போது அவர் பின்வருமாறு விளக்கம் அளித்தார்:

தற்போது என்பு முறிவு நெரிவுப் பிரிவு பல நவீன உபகரணங்களுடன் அளப்பரிய சேவைகளை அங்கு செய்து வருகின்றது. எங்களுக்கு கிடைத்த ஒரு மாபெரும் சொத்து என்பு முறிவு வைத்திய நிபுணர் ெடாக்டர் கலாவேந்தன் அவர்கள். அங்கு வயதுவந்தோர் முதல் சிறுபிள்ளை வரை வளைபாத கிளினிக் மற்றும் ஏனைய கிளினிக்குகளை அவர் சிறப்பாக நடத்தி வருகின்றார்.

அர்ப்பணிப்பு நிறைந்த ஊழியர்களுடன் சத்திர சிகிச்சை கூடம் அங்கு தனியாக இயங்கி வருகின்றது. இதனால் அங்கு நோயாளிககளின் எண்ணிக்கை தினம் கூடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. முன்னாள் பணிப்பாளர் ெடாக்டர் முரளீஸ்வரனின் பணி பாராட்டத்தக்கது.இன்றைய பணிப்பாளர் ெடாக்டர் ரங்கா சந்ரசேன அதனை தொடர்ந்து சிறப்பாக முன்னெடுத்து வருகிறார்.”

என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் ெடாக்டர் பத்திநாதன் கலாவேந்தன் சத்திர சிகிச்சை கூடத்தில் மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் வேளையில் அவரைச் சந்தித்துக் கேட்டபோது, “விபத்து மற்றும் அவசர பிரிவில் இருந்து இந்த எலும்பு முறிவு நெரிவு பிரிவு இயங்க ஆரம்பிக்கின்றது. இங்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முதியோர்களுக்கான கிளினிக் நடைபெறுகிறது. அதேபோன்று வெள்ளிக்கிழமைகளில் சிறுவர்களுக்கான கிளினிக் நடைபெறுகிறது.

எமது வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் சக வைத்திய அதிகாரிகள் தாதிய உத்தியோகத்தர்கள் ஏனைய ஊழியர்கள் பலத்த ஒத்துழைப்பை வழங்கி வருவதே இன்றைய வெற்றிக்கு காரணம்.

நிர்வாகத்தோடு இணைந்து இந்த வேலைகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். பொதுமக்களும் ஏனைய வைத்தியசாலைகளும் நிறைந்த ஒத்துழைப்பு தருகிறார்கள்” என்றார்.

(காரைதீவு குறூப் நிருபர்)…?

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x