Home » கிளப் வசந்த துப்பாக்கிச் சூடு; சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்

கிளப் வசந்த துப்பாக்கிச் சூடு; சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்

- 071-8591657; 072-4222223 அழைத்து தெரிவிக்கவும்

by Rizwan Segu Mohideen
August 3, 2024 9:56 pm 0 comment

– பொதுமக்களிடம் உதவி கோரல்

கடந்த ஜூலை 08ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறப்பதற்காக வந்த போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் 3 சந்கநபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் சம்பவத்தில் கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். பாடகி கே. சுஜீவா உள்ளிட்ட நால்வர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பொலிஸார் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கமைய சந்தேகநபர்கள் மூவரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

  1. தாருகர வருண இந்திக சில்வா (சங்க) – 951350753V
  2. பெட்டி ஹரம்பகே அஜித் ரோஹண (ச்சண்டி) – 199207801772
    (மாகும்புர அஹுங்கல்ல)
  3. முத்துவாதுர தரிந்து மதுசங்க டி சில்வா (பஹிரவயா)

குறித்த சந்தேகநபர்கள் தெரிந்தால் பின்வரும் இலக்கங்களுக்கு அழைக்கவும்.

தென் மாகாண குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி: 072-4222223
அத்துருகிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி: 071-8591657

கைது செய்ய உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

கிளப் வசந்த கொலை; முக்கிய சந்தேகநபர்கள் கைது

கிளப் வசந்த சூடு; பாடகி சுஜீவா சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்

கிளப் வசந்தவின் இறுதிக்கிரியை நாளில், மதூஷின் மயானத்தில் வைக்கப்பட்ட பதாகை

‘கிளப் வசந்த’ வின் இறுதிக் கிரியை; மலர்ச்சாலை பகுதியில் கடும் பாதுகாப்பு

கிளப் வசந்த கொலைச் சம்பவம்; கைதான 7 சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல்

அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு; நடந்தது என்ன?

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x