Wednesday, September 11, 2024
Home » புதிய அம்சம் கொண்டதாக 3 நிறங்களில் கடவுச்சீட்டு

புதிய அம்சம் கொண்டதாக 3 நிறங்களில் கடவுச்சீட்டு

ஒக்டோபர் முதல் வழங்க ஏற்பாடு

by gayan
August 3, 2024 7:00 am 0 comment

புதிய அம்சங்களை கொண்ட கடவுச்சீட்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வழங்கப்படுமென, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். இதற்கமைய சாதாரண, உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திர

கடவுச்சீட்டுகள் 3 வெவ்வேறு நிறங்களுடன் வழங்கப்படுமென்றும், அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையில் முதலாவது மின்னணு கடவுச்சீட்டு வழங்குவதற்கு தயாராகும் வகையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

எதிர்வரும் ஒக்டோபர் நடுப்பகுதியில் மின்னணு கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த முன்னர் பல தொழில்நுட்ப மற்றும் சிக்கல்களை நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது.

நாள் தோறும் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 1,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் அவசர பயண தேவைகளை கொண்டவர்களுக்கு குடிவரவு, குடியகல்வு திணைக்களம் கடவுச்சீட்டுகளை வழங்கி வருவதாகவும், அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x