கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய கலபொட ஞானிஸ்ஸர தேரர் நேற்று (02) தனது 81ஆவது வயதில்
காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானார்.
ஹிக்கடுவை ஸ்ரீ சுமங்கல நாயக்கரின் புகழ் பெற்ற சீடர் தலைமுறையில் இருந்த இவர், இந்நாட்டில் அனைவராலும் ‘கங்காராம பொடி ஹாமுதுருவோ’ என்று அழைக்கப்பட்டார்.
கங்காராம என்றதும் ‘கங்காராம பொடி ஹாமுதுருவோ என்று அன்னாரின் பெயர் உச்சரிக்கப்பட்டதும் கங்காராம விகாரையுமே பௌத்த மக்களுக்கு நினைவில் தோன்றும். அவர் அந்தளவுக்கு கங்காராம விகாரையின் தற்போதைய நவீனத்துக்கு முன்னோடியாக செயற்பட்டமையே இதற்கு காரணமாகும்.
கங்காராம விகாராதிபதியின் இறுதிக்கிரியை திங்களன்று நடைபெறுமென ஏற்பாட்டுக்குழு தெரிவித்தது.