வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே, மட்டும் தமிழ் பொது வேட்பாளரை கொண்டு வந்து விடாதீர்கள். அது இங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சிக்கலை உருவாக்கிவிடுமென, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் பொது வேட்பாளரை களமிறக்க தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு முழு உரிமையும் உண்டு. ஆனால் அது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வேண்டாமென்றும் அவர் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்குக்குள் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பவர்களின் இரண்வது விருப்பு வாக்கை கோரி நான் பிரசாரம் செய்வேன்.
அதேவேளை, தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்காதோர், இன்ன பிற காரணங்களுக்காக தமது வாக்கை எமது வேட்பாளருக்கு வழங்க வேண்டுமெனவும் நான் நேரடியாக பிரசாரம் செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர் கொள்கையை முரண்பாடுடன் அணுக நான் தயார் இல்லை. இதனை கண்ணியமாகவே அணுக வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.