251
2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
இன்று (01) அவர் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக முன்னணி கட்சி வேட்பாளராக அவர் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன தரப்பின் ஒத்துழைப்புடன் அவர் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
நீதி, அரசியலமைப்பு அமைச்சராக பதவி வகித்த விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.