Home » சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட்-2024: இலங்கைக்கு 4 வெண்கலப் பதக்கங்கள்

சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட்-2024: இலங்கைக்கு 4 வெண்கலப் பதக்கங்கள்

by Rizwan Segu Mohideen
August 1, 2024 12:09 pm 0 comment

கடந்த ஜூலை 21 முதல் 30 ஆம் திகதி வரை சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற 56 ஆவது சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட்_ 2024 இல் இலங்கை 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளதில் பெருமை கொள்கிறது.

90 நாடுகளில் இருந்து 333 திறமையான இளைஞர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். போட்டிகளில் கலந்து கொண்ட 4 இலங்கை இளம் மாணவர்களும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

பஹன்மா லெனோரா – (சங்கமித்த பாலிகா வித்தியாலயம், காலி), பி.ஆர்.எஸ்.டி.என்.பலிஹவடன – (கொழும்பு றோயல் கல்லூரி), வஜ்ர நெத் விஜேசூரிய -(ஆனந்த கல்லூரி, கொழும்பு) ஆகியோர் பங்கேற்றனர். ஸ்ரீமாதுரி சிந்தனைச்செல்வன் (இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி) என்பவரும் பங்கேற்றார். இவர்கள் அனைவரும் அண்மையில் வெ ளியான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெற்பேற்றில் உயர்தகைமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் 56 ஆவது சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட்_ 2024 இல் கலந்து கொண்ட இளம் பங்கேற்பாளர்கள் மற்றும் அவர்களின் மேற்பார்வையாளர்களை கௌரவிக்கும் வகையில் ரியாத்தில் உள்ள தூதரக வளாகத்தில் மதியபோசன விருந்து அளித்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x