Home » பிரபு தேவாவுடன் ஜோடி சேர்ந்த சீரியல் நடிகை!

பிரபு தேவாவுடன் ஜோடி சேர்ந்த சீரியல் நடிகை!

by damith
August 1, 2024 3:53 pm 0 comment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆரம்பத்தில் ராதிகா கேரக்டரில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை ஜெனிபர். இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் குணச்சித்திர கேரக்டரில் நடித்து உள்ளார். இவருடைய தந்தை ஒரு பிரபலமான நடன இயக்குனர்.

ஸ்ரீகாந்த் சினேகா நடிப்பில் வெளியான பார்த்திபன் கனவு என்ற படத்தில் வாடி மச்சினிச்சி என்ற பாடலுக்கு இவர் ஆடிய குத்தாட்டம் மிகவும் வைரலானது.

அத்துடன் கலர்ஸ் தமிழில் இவர் நடிப்பில் வெளியான அம்மன் சீரியல் பெரிய அளவில் ரீச் ஆனது. அதேபோலவே பாக்கியலட்சுமி சீரியலிலும் இவரது கேரக்டர் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், தற்போது நடிகரும், நடன இயக்குனருமான பிரபு தேவாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஜெனிபர்.

மேலும் அதில் பிரபு தேவாவுடன் படமொன்றில் நடிப்பதற்கு அவர் கமிட்டாகி உள்ளார். இதனை தற்போது போட்டோவுடன் குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

மேலும் அவர் ஜோடியாக போட்டோ போட்டதை பார்த்து ஒரு வேளை பிரபு தேவாவுக்கு ஜோடியாக நடிக்க போறாங்களோ என கமெண்ட் பண்ணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பிரபு தேவாவுடன் ஜோடி சேர்ந்த சீரியல் நடிகை!

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x