இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (CA ஸ்ரீலங்கா) 59வது ஆண்டாக பெருநிறுவன அறிக்கையிடலில் சிறந்து விளங்குவதைக் கொண்டாடும் மதிப்புமிக்க TAGS விருதுகள் 2024க்கான விண்ணப்பங்களை கோருவதை பெருமையுடன் அறிவிக்கிறது. நிதி மற்றும் நிதி அல்லாத அறிக்கையிடலில் புதுமை மற்றும் சிறந்த நடைமுறைகளின் கலங்கரை விளக்கமாக, TAGS விருதுகள் 12 டிசம்பர் 2024 அன்று கொழும்பில் உள்ள ஷங்ரி-லா ஹோட்டலில் பிரமாண்டமான விழாவாக நடைபெறும்.
TAGS விருதுகள், (வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், நிர்வாகம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றைக் குறிக்கும்), 1964 ஆம் ஆண்டு முதல் ஆண்டு அறிக்கை விருதுகள் என அறியப்பட்டது, நிதி மற்றும் நிதியல்லாத அறிக்கையிடலில் சிறந்து விளங்கும் நிறுவனங்களைக் கொண்டாடுவதற்கும் அங்கீகரிப்பதற்குமான பாரம்பரியத்தைத் தொடர்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள், ப்ளூ-சிப் நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள், SMEகள், NPOகள், NGOக்கள் மற்றும் வருடாந்த அறிக்கைகளை உருவாக்கும் பிற நிறுவனங்கள் உட்பட, பரந்த அளவிலான நிறுவனங்களுக்கு இந்தப் போட்டி திறக்கப்பட்டுள்ளது.
2024 TAGS விருதுகளுக்கான “டிஜிட்டல் எட்ஜ் – என்ரிச்சிங் கோர்ப்பரேட் ரிப்போர்ட்டிங் எக்ஸலன்ஸ்”, கோர்ப்பரேட் அறிக்கையிடலில் AI மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் உருமாறும் திறனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
2024 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் CA இலங்கையின் துணைத் தலைவர் திஷான் சுபசிங்க, TAGS விருதுகள் குழுவின் தலைவி .சமிலா குரே மற்றும் TAGS விருதுகள் குழுவின் மாற்றுத் தலைவர் நிஷானி பெரேரா ஆகியோர் கலந்துகொண்டு இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. செய்தியாளர் மாநாட்டின் போது, கொழும்பு பங்குச் சந்தை (CSE) யின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க மற்றும் தலைவர் டில்ஷான் விரசேகர ஆகியோர் முன்னிலையில் 2024 TAGS விருதுகளின் மூலோபாய பங்காளியாக CSE உத்தியோகபூர்வமாக இணைந்தது