Home » ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய சண்முகம் குகதாசன் எம்.பி.

ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய சண்முகம் குகதாசன் எம்.பி.

- திருகோணமலை மக்களின் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடல்

by Rizwan Segu Mohideen
August 1, 2024 7:34 pm 0 comment

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் ஜனாதிபதி ரணில் விகிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

திருகோணமலை மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற சிக்கல்கள் குறித்தும் அதற்குரிய தீர்வுத்திட்டங்கள் குறித்தும் இங்கு அவர் கலந்துரையாடியுள்ளார்.

நேற்று (31) இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர், மக்களை சந்தித்த அவர், தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை முன்னெடுக்கும் அதேவேளை அதற்கு சமாந்தரமாக அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு அமைவாக செயற்பட உள்ளதாக, குறிப்பிட்டிருந்தார்.

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரர் இரா. சம்பந்தனின் மறைவின் பின்னர் கடந்த ஜூலை 09ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட சண்முகம் குகதாசன், சில நாட்களுக்கு முன்னர் அரசாங்கத்திடம் இருந்து ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீட்டைப் பெற்று பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிக்காக ஒதுக்கியுள்ளார்.

ஏனைய அபிவிருத்திகளுக்காக மேலும் ரூ. 3 கோடி நிதியை கோரியுள்ளார்.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் சத்தியப்பிரமாணம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x