1996 ஜனவரி: ஹமாஸ் ஆயுதப் பிரிவின் தலைவரான யஹ்யா அய்யாஷை காசாவின் பெயித் லஹியாவில் வைத்து இஸ்ரேல் படுகொலை செய்தது.
2004 மார்ச்: காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ஆன்மீகத் தலைவர் மற்றும் நிறுவனர் ஷெய்க் அஹமது யாஸின் படுகொலை செய்யப்பட்டார்.
2004 எப்ரல்: யாஸினுக்கு அடுத்து நியமிக்கப்பட்ட தலைவர் மற்றும் ஹமாஸ் இணை நிறுவனரான அப்தல் அஸீஸ் அல் ரன்டிசி காசா நகரில் வைத்து இஸ்ரேலிய ஹெலி நடத்திய ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார்.
2024 ஜனவரி: ஹமாஸ் சிரேஷ்ட அதிகாரி சலாஹ் அல் அரூரி, பெய்ரூட்டில் இஸ்ரேலிய ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
2024 ஜூலை: ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மைல் ஹனியே, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.