சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழி மூல அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான மூன்று நாள் வதிவிடப் பயிற்சிக் கருத்தரங்கு (26,27,28ஆம் திகதிகளில்) அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஐ.எல்.ஜவாஹிர் தலைமையில் நடைபெற்றது.
வீதிப் போக்குவரத்துஉட்பட ஏனைய போக்குவரத்துகளில் ஏற்படும் அனர்த்தங்கள் மற்றும் இயற்கையின் சீற்றத்தால் நிலம், நீர், காற்றுகளினால் ஏற்படும் அனர்த்தங்களின் போது பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வேண்டிய தயார் நிலையில் தாதிய உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் தொடர்பில் பயிற்சிப் பட்டறையில் வளவாளர்களால் கருத்துரைகள் வழங்கப்பட்டன. மருத்துவ சேவை தாதியப் பணிப்பாளர் திருமதி எம்.பி.சி.சமன்மலியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் விசேட தர தாதிய உத்தியோகத்தர் பி.ரி.நௌபர் ஒருங்கிணைப்பில் வளவாளர்களாக அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.றியாஸ் உட்பட மற்றும் பல வைத்தியத்துறை சார் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அக்கறைப்பற்று விஷேட நிருபர்