Home » INSEE Cement விருது வழங்கி கௌரவிப்பு

INSEE Cement விருது வழங்கி கௌரவிப்பு

by mahesh
July 31, 2024 10:15 am 0 comment

இலங்கையின் முன்னணி மற்றும் ஒரேயொரு, முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட உள்நாட்டு சீமெந்து உற்பத்தி நிறுவனமான INSEE Cement, அண்மையில் இடம்பெற்ற Green Industry Awards 2024 விருதுகள் நிகழ்வில் தனது சாதனைகள் குறித்து பெருமையுடன் அறிவித்துள்ளது. தாழ்ந்த காபன் மட்டத்துடன், காலநிலை நெகிழ்திறன் கொண்ட உற்பத்திக்காக வெள்ளி விருதையும், வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு மற்றும் பொறுப்புமிக்க வழியிலான உற்பத்திக்காக வெண்கல விருதையும் வென்று INSEE Cement கௌரவிக்கப்பட்டுள்ளது. ஜுன் 23 ஆம் திகதி BMICH இல் இடம்பெற்ற நிலைபேணத்தக்க கைத்தொழில் அபிவிருத்திக்கான பசுமை கைத்தொழில் முயற்சிகள் தொடர்பான 1வது சர்வதேச மாநாட்டின் போது கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையால் இவ்விருதுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.           

INSEE Cement நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜான் குனிக் அவர்கள் நிறுவனத்தின் நிலைபேற்றியல் சார்ந்த பயணத்தில் இவ்விருதுகளின் முக்கியத்துவம் குறித்து கருத்து வெளியிடுகையில், “INSEE Cement நிறுவனத்தைப் பொறுத்தவரையில், எமது செயல்பாடுகள் அனைத்திலுமே நிலைபேற்றியல் என்பது மையமாகக் காணப்படுகின்றது. சூழல் நேய நடைமுறைகளை ஊக்குவித்து மற்றும் பொறுப்புள்ள வர்த்தக நிறுவனமாக செயற்படுவதில் எமது முயற்சிகளை இவ்விருதுகள் நிரூபிக்கின்றன. நிலைபேற்றியல் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றுக்கு முன்னுரிமையளிப்பதன் மூலமாக, உள்நாட்டு கட்டுமான மூலப்பொருட்கள் மற்றும் கட்டுமானத் துறையை உயர் செயல்திறன் கொண்டதாகவும், தாழ்ந்த காபன் மட்டம் கொண்டதாகவும், மற்றும் கடுமையான சூழல் தராதரங்கள் மற்றும் எழுந்துகொண்டிருக்கும் காலநிலை சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் எதிர்காலத்திற்கு தயார்நிலை கொண்ட தீர்வுகளை வழங்குகின்றவையாகவும் மேம்படுத்துவதில் INSEE Cement அர்ப்பணிப்புடன் உள்ளது. INSEE Cement நிறுவனம் தொழிற்துறையில் எப்போதும் புதுமைகளை புகுத்துவதில் முன்னிலை வகித்து வருவதுடன், எமது எதிர்காலம் குறித்த அக்கறை சார்ந்த கோட்பாடுகள் ஆழமாக வேரூன்றிய வண்ணம் ஏனைய நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக செயல்பட்டு வருகின்றது,” என்று குறிப்பிட்டார்.    

குறித்த இலக்கினைக் கொண்டுள்ள INSEE Sustainability Ambition 2030 என்ற நிலைபேற்றியல் குறிக்கோளுடன், நிறுவனத்தின் நிலைபேற்றியல் சார்ந்த அர்ப்பணிப்பானது காலநிலை மற்றும் எரிசக்தி, இயற்கை உயிரினம் மற்றும் நீர்ப் பாதுகாப்பு மற்றும் சுழற்சிப் பொருளாதாரம் ஆகிய மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மக்களுக்கு தீங்கிழைக்காமை, சமூகம் மற்றும் தொடர்புபட்ட தரப்பினரின் தீவிரமான ஈடுபாடு ஆகிய தொனிப்பொருள்களுடன் இத்தூண்கள் பின்னிப்பிணைந்துள்ளதுடன், நிறுவனத்தின் முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ள முழுமையான சூழல், சமூக மற்றும் நிர்வாக ஆட்சிக் கட்டமைப்பினையும் வடிவமைத்துள்ளது.     

கட்டுமானத் துறையில் தாழ்ந்த மட்டத்தில் காபன் கொண்ட மற்றும் காலநிலை நெகிழ்திறன் கொண்ட உற்பத்தி செயல்முறைகளை மேம்படுத்தும் வகையில் INSEE Cement இன் முன்னோடி முயற்சிகளுக்கான அங்கீகாரமாகவே வெள்ளி விருது வழங்கப்பட்டுள்ளது. தாழ்ந்த மட்டத்தில் காபன் கொண்ட, உயர் செயல்திறன் கொண்ட போர்ட்லான்ட் கலப்பு சீமெந்து (Portland Composite Cement – PCC) என்ற கலப்பு சீமெந்தினை இலங்கைச் சந்தையில் அறிமுகப்படுத்தியமை போன்ற முக்கியமான படிமுறைகளினூடாக காபன் அடிச்சுவட்டைக் குறைப்பதில் INSEE Cement இன் அர்ப்பணிப்பை இந்த அங்கீகாரம் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. இம்முயற்சிகள் INSEE Cement இனால் சூழல் மீது ஏற்படுத்தப்படுகின்ற தாக்கத்தை கணிசமான அளவில் குறைத்து, அனல் மற்றும் மின்சார எரிசக்தி நுகர்வின் பயன்பாட்டை விரயமாக்காது உச்சப்படுத்தல், படிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் தொழில்துறை கூட்டாண்மைகள் மூலமாக உற்பத்தியில் மீள்சுழற்சி செய்யப்பட்ட கனிமங்களை ஒருங்கிணைத்தல் அடங்கலாக நிலைபேணத்தக்க உற்பத்தி நடைமுறைகளை அது ஊக்குவித்து வருகின்றது. ஆசியாவிலேயே தனித்துவமான ஒன்றாகத் திகழ்கின்ற அதிநவீன INSEE innovation to industry (i2i)  ஒத்துழைப்பு மையத்தில் முக்கியமான காண்பிக்கப்படுகின்ற ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மீதான கணிசமான முதலீடுகளுடன் இப்புத்தாக்கங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.            

இதற்கிடையில், வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு மற்றும் பொறுப்புடனான உற்பத்தி வழிமுறைகள் மீது நாம் காண்பிக்கின்ற அர்ப்பணிப்பிற்கான அங்கீகாரமாக வெண்கல விருது வழங்கப்பட்டுள்ளது. நிலைபேற்றியல் மற்றும் சமூக ஈடுபாடு மீதான எமது பிரதான விழுமியங்களுடன் ஒன்றும் வகையில், சமூகம் மற்றும் சூழல் மீது நேர்மறை விளைவுகளைத் தோற்றுவிப்பதே INSEE Cement நிறுவனத்தின் வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகளின் நோக்கமாகும். மரநடுகை, கடற்கரை சிரமதானம், பாதுகாப்பான குடிநீர் வழங்கல் செயற்திட்டங்கள், கண்டல் மரம் மற்றும் பவளப்பாறை மீட்சி மற்றும் பல்வகைப்பட்ட செயற்திட்டங்கள் INSEE Cement நிறுவனத்தின் நிலைபேற்றியல் சார்ந்த முயற்சிகளில் அடங்கியுள்ளன.

இந்த வலுவான சூழல், சமூக மற்றும் நிர்வாக ஆட்சி கட்டமைப்பின் வழிகாட்டலுடன், சமூகம் மற்றும் தொடர்புபட்ட பல்வேறு தரப்பினருடனான தீவிரமான ஈடுபாடுகளை முன்னெடுத்து வரும் நிலையில், தாழ்ந்த மட்டத்தில் காபன் கொண்ட தொழில்நுட்பங்களை மேம்படுத்தல் மற்றும் இலங்கைக்கும், அதற்கு அப்பாலும் பசுமையான எதிர்காலத்தை வளர்த்தல் மீது நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை இவ்விருதுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இலங்கையில் வர்த்தக பொறுப்புணர்வு மற்றும் சூழலைப் பாதுகாப்பதில் முன்னின்று உழைத்தல் ஆகியவற்றுக்கு தரஒப்பீட்டு நியமமொன்றை நிலைநாட்டி, அனைவரையும் அரவணைக்கும் மற்றும் நேர்மறை விளைவைத் தோற்றுவிக்கும் எமது நிலைபேற்றில் சார்ந்த முயற்சிகளை அவை உறுதிப்படுத்துகின்றன.

INSEE Cement நிறுவனம் தொடர்பான விபரங்கள்:
INSEE Cement என்ற நாமத்தில் அறியப்படுகின்ற Siam City Cement (Lanka) Limited ஆனது 1969 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் நிறுவப்பட்ட தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான Siam City Cement Public Company Limited (SCCC) இன் உறுப்பு நிறுவனமாகும். இந்நிறுவனம் இலங்கையின் முன்னணி மற்றும் ஒரேயொரு முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட சீமெந்து உற்பத்தியாளராகத் திகழ்வதுடன், இலங்கையில் மிகவும் கேள்விமிக்க INSEE சங்ஸ்தா, INSEE மகாவலி மரைன் பிளஸ் வர்த்தகநாமங்கள் அடங்கலாக, நிர்மாணத் தீர்வுகளின் முழுமையான தயாரிப்பு வரிசையையும் வழங்கி வருகின்றது. 550 பேரைக் கொண்ட தொழில் வல்லுனர்கள் அணியின் பக்கபலத்துடன், உள்நாட்டு கட்டட மற்றும் நிர்மாணத் தொழிற்துறையை உயர் செயல்திறன் கொண்டதாக, காபனைக் குறைக்கும் வழிமுறைகளுடன், எதிர்காலத்திற்கு ஏற்றவாறான கட்டுமானங்களை நோக்கி தொடர்ந்து நகர்த்திச் செல்வதுடன், புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் நிறுவனத்தின் வலுவான முதலீட்டினூடாக உயர் தரம் மிக்க கலவை சீமெந்து தயாரிப்புக்கள் மற்றும் நிலைபேணத்தகு கட்டட மூலப்பொருட்களை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகின்றது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x