Home » பங்குகள் ஒன்றிணைப்புக்கு அமானா வங்கி பங்குதாரர்கள் வரவேற்பு

பங்குகள் ஒன்றிணைப்புக்கு அமானா வங்கி பங்குதாரர்கள் வரவேற்பு

- ஒன்றிணைப்பின் பின்னர் பங்கொன்றின் தேறிய சொத்துப் பெறுமதி ரூ. 40 ஐ விட அதிகரிக்கும்

by mahesh
July 31, 2024 10:00 am 0 comment

கொழும்பு பங்குப்பரிவர்த்தனைக்கு வழங்கியிருந்த அறிவித்தலின் பிரகாரம் பங்குகளை ஒன்றிணைக்கும் செயற்பாட்டுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக அமானா வங்கி அறிவித்துள்ளது. பங்குதாரர்களின் பெறுமதியை மேம்படுத்துவது, வங்கியின் உறுதியான செயற்திறன் நிறைந்த நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் போன்றவற்றுக்கு பொருத்தமான செயற்பாடாக இது கருதப்பட்ட நிலையில், முதலீட்டாளர் சமூகத்தினால் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரூ. 6 பில்லியன் மூலதன உள்ளீட்டை அண்மையில் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

2023ஆம் ஆண்டில் வங்கி பதிவு செய்திருந்த அதிசிறந்த நிதிப் பெறுபேறுகளைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனது வளர்ச்சி மற்றும் மீண்டெழுந்தன்மையை தொடர்ந்திருந்தது. முதல் காலாண்டில் வரிக்கு பிந்திய இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 91% இனால் உயர்ந்திருந்தது. முற்பணங்கள் 8% வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், மக்களுக்கு நட்பான மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட வங்கியியல் வழிமுறைக்கான கேள்வியை பிரதிபலித்திருந்தது. துறையில் குறைந்த நிலை 3 மதிப்பிறக்க நிதியளிப்பு விகிதமான 1.6% ஐ வங்கி பேணியிருந்ததுடன், வினைத்திறனான இடர் முகாமைத்துவத்தை பிரதிபலித்திருந்தது. மேலும், பங்கின் மீதான வருமானம் (ROE), 6.2% இலிருந்து 7.8% ஆக உயர்ந்து, மேம்படுத்தப்பட்ட பங்குதாரர் வருமதியை வெளிப்படுத்தியிருந்தது.

கடந்த ஆறு வருட காலப்பகுதியில் வங்கியின் தொடர்ச்சியான பங்கிலாப வெளியீட்டினூடாக பங்குதாரர்களுக்கான பெறுமதியில் அமானா வங்கியின் அர்ப்பணிப்பு என்பது மேலும் உறுதி செய்யப்பட்டிருந்தது. பங்கிலாப விளைவில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி மற்றும் செலுத்தப்பட்ட பங்கிலாபம் ஆகியவற்றில் உறுதியான வளர்ச்சியை காண்பித்திருந்ததுடன், முதலீட்டாளரின் நம்பிக்கையை மீள உறுதி செய்திருந்தது. மேலும், வெற்றிகரமான உரிமைப் பங்கு வழங்கல் என்பதனூடாக சவால்கள் நிறைந்த காலப்பகுதியிலும், ரூ. 6 பில்லியன் திரட்டப்பட்டிருந்ததுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்குதாரர்களிடமிருந்து கிடைக்கும் உறுதியான ஆதரவை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மூலதன உள்ளீட்டினூடாக எதிர்கால வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கப்படும் என்பதுடன், வங்கியின் நிதி அடித்தளத்தை வலிமைப்படுத்துவதாக அமைந்திருக்கும்.

10 இலிருந்து 1 எனும் ஒன்றிணைப்பின் பிரகாரம், அமானா வங்கி சாதாரண வாக்களிப்பு பங்குகள் தற்போது 551,125,746 ஆக காணப்படும். ஒன்றிணைப்பின் பின்னர், வங்கியின் பங்கொன்றின் தேசிய சொத்துப் பெறுமதி ரூ. 40 ஐ கடக்கும் என 2024 முதல் காலாண்டு நிதிக் கூற்றுகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது.

பங்கு ஒன்றிணைப்பு தொடர்பில் அமானா வங்கி முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “பங்குதாரர் பெறுமதியை மேம்படுத்துவதற்கான மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக பங்கு ஒன்றிணைப்பு அமைந்துள்ளது. எமது வளர்ச்சி மூலோபாயத்தில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் அவர்களின் வரவேற்பு அமைந்திருந்தது. எமது மூலோபாய திட்டத்தின் பிரகாரம் நிலைபேறான வளர்ச்சியை முன்னெடுப்பது மற்றும் எமது பங்குதாரர்களுக்கு நீண்ட கால பெறுமதியை ஏற்படுத்திக் கொடுப்பது ஆகியவற்றுக்கு எம்மை தொடர்ந்தும் அர்ப்பணித்து செயலாற்றுவோம்.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.

அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x