பொலிஸ் மாஅதிபர் விவகாரத்துக்கு விரைவான தீர்வை பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுத்து மூலம் அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பொலிஸ் மாஅதிபர் அல்லது பதில் பொலிஸ் மாஅதிபரை நியமிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம். ஏ. எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. அந்த பதிவில்,
”பொருளாதாரத்துக்கே நாம் முன்னுரிமையளிக்கிறோம் ஜனாதிபதி ஊடக மையத்தில்ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் விடயங்களை தெளிவுபடுத்தும் வகையிலேயே அந்த விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக் குழுவினால் ஜனாதிபதித் தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், கூட்டப்படும் முதலாவது கூட்டம் இதுவென்றும் அவர் தெரிவித்தார். மேற்படி கூட்டத்தில் பொலிஸ் மாஅதிபர் விவகாரம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது .
(லோரன்ஸ் செல்வநாயகம்)