273
சுற்றுலா இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இறுதி 20 ஓவர் போட்டி இன்று (30) நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றால் இலங்கையில் 3 போட்டிகள் கொண்ட T20 தொடரை முழுமையாக கைப்பற்றிய முதல் போட்டியாக இந்த போட்டி வரலாற்றில் இடம் பெறுமென்பது சுட்டிக்காட்டத்தக்கது.