426
நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளது.
இன்று (27) பிற்பகல் 5.00 மணியளவில் பொரளை பொதுமயானத்தில் அவரது இறுதிக் கிரியைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட அரசியல்வாதியும் சமூக செயற்பாட்டாளருமான விக்ரமபாகு கருணாரத்ன தனது 81ஆவது வயதில் கடந்த வியாழக்கிழமை (25) அதிகாலை காலமானார்.
1943 மார்ச் 08ஆம் திகதி பிறந்த கேம்பிரிட்ஜ் கல்வியாளரான இவர், இலங்கை விஞ்ஞானியுமாவார்.