74
களுத்துறை மாவட்ட செயலக கட்டடத்தின் தள மாடியில் நேற்று (24) காலை திடீரென தீப்பிடித்துள்ளது.
இதனையடுத்து ஏழு மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் அமைந்துள்ள அரச பணிமனைகளில் பணியாற்றும் ஊழியர்களும் பல்வேறு தேவைகளுக்காக வந்திருந்த பொதுமக்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலக கட்டட தொகுதியின் தள மாடியில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கின் காரணமாகவே தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
(பாணந்துறைமத்திய குறூப் நிருபர்)