583
எகிப்து அரபு குடியரசின் 72 ஆவது தேசிய தினம் (22) இரவு கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் எகிப்து தூதுவர் மஜட்மொஸ்லெஹ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தேசிய தின ஞாபகார்த்த கேக் வெட்டுவதை படத்தில் காணலாம். விழாவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரிய உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள், முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
(படம்: ருசைக் பாரூக்)