கொழும்பு – சிட்டி லீக் சவால் கிண்ண கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் (21) நடந்த சோண்டர்ஸ்–ஜாவா லேன் இடையிலான போட்டியில் 3–1 என்ற கோல் கணக்கில் சோண்டர்ஸ் அணி வெற்றியீட்டியதோடு, நியூ ஸ்டார் மற்றும் ஓல்ட்பென்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியூ ஸ்டார் 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
சோண்டர்–ஜாவா லேன் இடையிலான போட்டியின் 45 ஆவது நிமிடத்தில் சோண்டர் வீரர் பீ.பீ. கிம்ஹான கோல் புகுத்தியதோடு, 48 ஆவது நிமிடத்தில் ஜாவா லேனின் எம்.என்.எம். சஜித் கோல் ஒன்றை பெற்றார். தொடர்ந்து 58 ஆவது மற்றும் 81 ஆவது நிமிடத்தில் எம். பிரியங்கர மற்றும் பீ.பீ. கிம்ஹான ஆகியோர் கோல் புகுத்தி சோண்டர்ஸின் வெற்றியை உறுதி செய்தனர்.
ஓல்ட்பென்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நியூ ஸ்டார் அணி சார்பில் போட்டியின் முதல் பாதியில் மொஹமட் அனஸ் கோல் புகுத்தினார்.
இந்தத் தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் ஜூலை 27 ஆம் திகதி பிற்பகல் 2.30 இற்கு நியூ ஸ்டார் மற்றும் ஓல்ட் பென்ஸ் அணிகளுக்கு இடையிலும் பிற்பகல் 4.30 இற்கு ஜாவா லேன் மற்றும் சோண்டர்ஸ் அணிளுக்கு இடையிலும், 28 ஆம் திகதி பிற்பகல் 2.30 இற்கு மாளிகாவத்தை யூத் மற்றும் ரினொன் அணிகளுக்கு இடையிலும் பிற்பகல் 4.30 இற்கு செலஞ்சர்ஸ் மற்றும் ரத்னம் அணிகளுக்கு இடையிலும் நடைபெறவுள்ளன.
பிரின்ஸ் குணசேகர