Home » முத்தக்காட்சியில் நடிக்க அனுபமா விதித்த நிபந்தனை

முத்தக்காட்சியில் நடிக்க அனுபமா விதித்த நிபந்தனை

by damith
July 23, 2024 12:30 pm 0 comment

நடிகை அனுபமா பரமேஸ்வரன் முத்தக்காட்சி, படுக்கையறை காட்சிகளில் நடிக்க தயார் என்றும் , ஆனால் அதே நேரத்தில் சில நிபந்தனைகள் விதித்ததை பார்த்து தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

’பிரேமம்’ என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தனுஷ் நடித்த ’கொடி’ என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் ’தள்ளி போகாதே’ ’சைரன்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும், சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். தற்போது அவர் ஒரே நேரத்தில் ஐந்து படங்கள் நடித்து வருகிறார் என்பதும் அதில் ’பைசன்’ ’லாக்டவுன்’ ஆகிய இரண்டு தமிழ் படங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்த ’தில்லு ஸ்கொயர்’ என்ற தெலுங்கு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கிளாமரில் அசத்தியிருந்தார் என்பதும் தெரிந்தது. இதனை அடுத்து அவருக்கு கிளாமர் கேரக்டர்கள் குவிந்து வருவதாகவும் குறிப்பாக முத்த காட்சிகள், படுக்கையறை காட்சிகள் கொண்ட கதை அம்சம் அதிகம் வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் முத்த காட்சிக்கு ஒரு ரேட் , படுக்கையறை காட்சிக்கு ஒரு ரேட் என தனித்தனியாக பிரித்து சம்பளம் கேட்பதாகவும், அவர் கூறும் கணக்கை கூட்டி பார்த்தால் அவருடைய சம்பளம் ஒரு கோடி நெருங்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவரிடம் கதை சொல்ல வந்த இயக்குனர்கள் தெறித்து ஓடுவதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த செய்திக்கு அனுபமா பரமேஸ்வரன் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு படத்தின் கதையைக் கேட்டு, அந்த படத்தில் நடிக்கலாமா? நடிக்க வேண்டாமா? என்று அனுபமா பரமேஸ்வரன் முடிவு செய்ததாகவும் முத்தக்காட்சி படுக்கையறை காட்சிகளுக்கு எல்லாம் தனியாக அவர் சம்பளம் கேட்டதில்லை என்றும் இது அவரது தொழில் எதிரிகள் பரப்பி வரும் வதந்தி என்றும் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT