Tuesday, October 8, 2024
Home » இராமேஸ்வரத்திலிருந்து படகு மூலம் இலங்கை வர முயன்ற பெண் கைது

இராமேஸ்வரத்திலிருந்து படகு மூலம் இலங்கை வர முயன்ற பெண் கைது

முகவர்களாக செயற்பட்ட 02 பேரும் கைது

by gayan
July 20, 2024 1:30 pm 0 comment

இராமேஸ்வரத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் வர முயன்ற முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் 02 முகவர்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இராமநாதபுரம் கடற்கரைப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் பொலிஸார் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்கிடமாக நின்ற பெண்ணிடம் விசாரணை செய்த போது, பெண் இலங்கைத் தமிழில் பேசியுள்ளார்.

இதையடுத்து, அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர் முல்லைத்தீவு பாண்டியன் குளத்தைச் சேர்ந்த 45 வயது பெண் என்றும் கடந்த 2013ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக 06 மாத விசா பெற்று சென்னைசென்றதும் தெரியவந்துள்ளது.

புதுச்சேரியில் 24 நாள்கள் தங்கிய இப்பெண், சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள இலங்கையர் ஒருவரின் வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக டெய்லராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஜூன் 30ஆம் திகதி மதுரைக்கு வந்து, உறவினர் உதவியுடன் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜேசு (35), 17 வயது நபர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு, இலங்கைக்கு படகில் அழைத்துச் செல்வதற்கு 50,000 ரூபா தருவதாகக் கூறியுள்ளார்.

இதன்படி, இலங்கைக்கு படகில் செல்வதற்காக இராமேஸ்வரத்துக்கு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து பெண்ணையும் முகவர்களாக செயல்பட்ட இருவரைக் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்றுமொரு நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x