நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணிநேரத்துள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 789 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 776 ஆண்களும் 13 பெண்களும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 32 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 15 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 153 கிராம் 313 மில்லிகிராம் ஹெரோயின், 255 கிராம் 184 மில்லிகிராம் ஐஸ், 1,839 கிராம் 429 மில்லி கிராம் கஞ்சா, 9,508 கஞ்சா செடிகள் மற்றும் 101 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.