Home » யாழ்ப்பாணத்து மக்களுக்காக உண்மையாக செயற்பட்டேன்

யாழ்ப்பாணத்து மக்களுக்காக உண்மையாக செயற்பட்டேன்

மருத்துவத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை -அர்ச்சுனா

by gayan
July 20, 2024 6:30 am 0 comment

யாழ்ப்பாணத்து மக்களுக்காக உண்மையாக நான் செயற்பட்டேன். வைத்தியத்துறை மாபியாக்களுக்கு அது பிடிக்கவில்லை. அதனால் என்னை இங்கிருந்து விரட்டுகின்றனர். ஆனால், இந்த மக்களின் அன்பு என்பது எனது இதயத்துடிப்பு. இந்த மண்ணிலிருந்து விடைபெறுகின்றேன் என சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய

அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை என்ற வைத்தியசாலை இல்லாதது போல அரசியல்வாதிகள் அமைச்சரிடம் பேசும்போது நாம் பேசி பயனில்லை எனவும் கவலை வெளியிட்டார். சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரத்தில் நீடித்து வந்த சர்ச்சைகளுக்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (19) நடைபெற்றது.

இதன் போது இராமநாதன் அர்ச்சுனா மேலும் தெரிவிக்கையில்,

ஒரு வைத்தியருக்காக பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டது உலக வரலாற்றில் இதுவே முதல் முறை.

தென்மராட்சி மக்களுக்கு நான் எப்போதும் விசுவாசமாக இருப்பேன். இந்த மக்களின் அன்பு என்பது எனது இதயத்துடிப்பு. இந்த மண்ணில் இருந்து விடைபெறுகின்றேன். சுகாதார அமைச்சிற்கு வருமாறு நேற்று முன்தின திகதியிட்டு நேற்று எனக்கு கடிதம் கிடைத்துவிட்டது.

கொழும்பு சென்று இன்று அங்கு புதிய நியமனத்தைப் பெற்றுக் கொண்டு நான் முன்னர் கடமையாற்றிய பேராதனை வைத்தியசாலைக்குச் சென்று கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளேன் என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x