– இந்திய ஒருநாள், T20 அணி அறிவிப்பு
இலங்கை அணிக்கு எதிரான T20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
T20 உலகக் கிண்ண மற்றும் சிம்பாப்வே தொடருக்கு பின் இந்திய அணி இலங்கைக்கு எதிராக 3 T20, ஒருநாள் போட்டிகளில் மோதவுள்ளது.
ஜூலை 27-ஆம் திகதி முதல் T20 தொடங்குகிறது. தொடர்ந்து 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் நடக்கும் மூன்று T20 போட்டிகளிலும் இந்திய அணி விளையாடுகிறது. இதன்பின் ஆகஸ்ட் 2, 4, 7ஆம் திகதிகளில் 50 ஓவர் போட்டிகள் நடக்கவுள்ளன. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியை BCCI அறிவித்துள்ளது.
T20 தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஷுப்மன் கில் துணை கேப்டனாகவும் செயல்படுவார் என BCCI அறிவித்துள்ளது. தொடரிலிருந்து பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. T20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீரின் விருப்பப் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் இருப்பதாக தெரிகிறது.
T20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் , கலீல் அகமது, முகமத் சிராஜ்.
ஒருநாள் தொடருக்கான அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.