விளையாட்டுத் துறை அமைச்சு, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம், இலங்கைக்கான சீன தூதரக அலுவலகம் மற்றும் சீனாவின் குவென்சோ இலங்கை துணைத்தூதரக அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘இலங்கை – குவென்சோ நட்புறவு சைக்கிளோட்டப் போட்டியில்’ பங்கேற்பதற்காக 47 சீனா நாட்டு சைக்கிளோட்ட வீரர்கள் நேற்று (16) கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.
இலங்கையின் 19 வயதுக்கு உட்பட்ட சைக்கிளோட்ட அணியை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த சைக்கிளோட்டப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி விளையாட்டுத் துறை அமைச்சினால் தேர்வு செய்யப்பட்ட 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை சைக்கிளோட்ட வீரர்கள் 11 பேர் சீன சைக்கிளோட்ட வீரர்களுடன் இணைந்து இன்று (17) இந்த சைக்கிளோட்டப் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். கொழும்பு விளையாட்டுத் துறை அமைச்சுக்கு முன்னால் ஆரம்பமாகும் போட்டி காலி வீதி ஊடாக எதிர்வரும் 20 ஆம் திகதி யால சரணாலயத்தில் நிறைவடையவுள்ளது.
கட்டுநாயக்க டீ.கே.ஜி. கபில