227
ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். ஷபான் கொழும்பு மத்திய வலய ஐ.தே.க அமைப்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதம் அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் வைத்து ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ருஸைக் பாரூக்