Home » அமானா வங்கியின் பங்குகள் ஒருமுகப்படுத்தலுக்காக பங்குதாரர்களின் அனுமதியைப் பெற்றுள்ளது

அமானா வங்கியின் பங்குகள் ஒருமுகப்படுத்தலுக்காக பங்குதாரர்களின் அனுமதியைப் பெற்றுள்ளது

by Rizwan Segu Mohideen
July 17, 2024 3:21 pm 0 comment

அமானா வங்கியின் ஏற்கனவே காணப்படும் ஒவ்வொரு 10 சாதாரண வாக்குரிமை பங்குகளும், தலா 1 சாதாரண வாக்குரிமை பங்காக ஒருங்கிணைப்பதற்கு பங்குதாரர்களின் அனுமதி கிடைத்துள்ளதாக கொழும்பு பங்குப் பரிவர்த்தனைக்கு அமானா வங்கி அறிவித்துள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட அதிவிசேட பொது ஒன்றுகூடலின் போது இதற்கான விசேட தீர்மானம் ஏகமனதாக எய்தப்பட்டது.

இந்த ஒருங்கிணைப்பின் காரணமாக, அமானா வங்கி சாதாரண வாக்குரிமை பங்குகளில், ஏற்கனவே காணப்பட்ட 5,511,257,461 பங்குகளுடன் ஒப்பிடுகையில், 551,125,746 பங்குகள் காணப்படும். ஒருங்கிணைக்கும் செயன்முறை மற்றும் CDS பதிவுகளை மெருகேற்றும் செயற்பாடுகளுக்காக அமானா வங்கியின் பங்குகளின் பரிவர்த்தனை ஜுலை 8 ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டிருக்கும் என்பதுடன், ஜுலை 15ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கும்.

ஒருங்கிணைப்புக்கான அனுமதி தொடர்பில் அமானா வங்கியின் தவிசாளர் அஸ்கி அக்பரலி கருத்துத் தெரிவிக்கையில், “இந்த ஒருங்கிணைப்புக்கான அனுமதியை வழங்கியமைக்காக எமது பங்குதாரர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம். இந்த நகர்வினூடாக பங்கு விலை தளம்பல்களை குறைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதுடன், இதர வங்கிகளுடன் ஒப்பீட்டை மேம்படுத்துவதாக அமைந்திருக்கும். மேலும் மேம்படுத்தப்பட்ட முதலீட்டாளர் விகிதங்களை காண்பிப்பதுடன், சந்தையில் அமானா வங்கியின் பங்குகளை மிகவும் கவர்ச்சிகரமானதாக அமைந்திருக்கச் செய்யும்.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.

அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT