இலங்கையில் முன்னணியில் உள்ள பல் துறை கூட்டு நிறுவனமான DIMO நிறுவனத்தின் கல்விப் பிரிவான DIMO Academy ஆனது, Automobile Mechatronics மற்றும் Plant Engineering போன்ற பல்வேறு துறைகளில் இலங்கை இளைஞர்களின் திறமைகளை வலுவூட்டுவதன் மூலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழிற்கல்வியில் தனித்துவமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்கல்வியில் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக செயற்படும் iMOVE நிறுவனத்தினால், அண்மையில் இந்த தனித்துவமான பணியை அங்கீகரித்து DIMO Academy பற்றி அதன் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. iMOVE ஆனது, ஜேர்மனியின் பயிற்சி மற்றும் சர்வதேச பங்காளிகளுக்கு இடையே தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (VET) தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் German Federal Ministry of Education and Research (BMBF) இனால் நிறுவப்பட்ட இணையத்தளமாகும்.
DIMO Academy இனால் மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் மூலம், நடைமுறை ரீதியாக சிக்கல்களை தீர்க்கும் திறன் காணப்படுவதன் காரணமாக, இந்த மாணவர்களுக்கு இத்துறையில் முன்னணி நிறுவனங்களில் தொழில்களை பெறுவதற்கு அதிக கேள்வி காணப்படுகின்றது. புதிய சுயகற்றல் முறை மூலம் நிறுவனத்தின் கற்றல் செயன்முறை முன்னெடுக்கப்படுவதோடு, பயிற்சியின் உள்ளடக்கம் தொடர்ச்சியாக புதுப்பிக்கப்பட்டும் வருகிறது. அத்துடன், DIMO நிறுவனத்தின் சர்வதேச அளவிலான திட்டங்களின் மூலம் பெறப்படும் தொழில்துறை ரீதியான பயிற்சி அனுபவமும் மாணவர்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. DIMO Academy இல் ஏற்கனவே பயின்ற மாணவர்கள் தற்போது ஐரோப்பா, மத்திய கிழக்கு, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் தொழில்துறை வாய்ப்புகளைப் பெற்றுள்ளதோடு, வெற்றிகரமான தொழில்முனைவோராகவும், உள்ளுர் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெறவும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
தனது பாடத்திட்டத்தை பாரம்பரிய முறைகளுக்கு அப்பால் கொண்டு செல்வதன் மூலம் உள்ளூர் தொழிற்கல்வித் துறையை மேம்படுத்துவதில் முக்கிய பங்களிப்பை DIMO Academy வழங்கியுள்ளது. மனித வள முகாமைத்துவம், சந்தைப்படுத்தல், நிதி மற்றும் உள்நாட்டு தொழிலாளர் சட்டம் போன்ற பல்வேறு பாடங்களை DIMO Academy அதன் பாடத் திட்டத்தில் கொண்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தாங்கள் ஈடுபட்டுள்ள துறைகளில் நிபுணத்துவம் பெறவோ, தொழில்முனைவோராக மாறவோ அல்லது தங்களின் கல்வியை மிக உயர்ந்த நிலைக்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கவோ அவர்களை வலுவூட்டுகிறது.
தற்போது, தொழிற்கல்வி தொடர்பில் சமூகத்தில் நிலவும் கருத்துகளை DIMO Academy மாற்றியமைத்துள்ளது. ஆங்கிலம் மற்றும் ஜேர்மன் மொழிப் பாடங்களை DIMO Academy உள்ளடக்கியுள்ளது. அத்துடன், STEM துறைகளை பெண்கள் மத்தியில் ஊக்குவிப்பதிலும், Automobile Mechatronics போன்ற துறைகளில் கற்கைகளைத் தொடர்வதற்கு அவர்களை ஊக்குவிப்பதிலும் DIMO Academy உறுதியாக உள்ளது. Automobile Mechatronics தொடர்பில் இலவச தொழிற்கல்வியை வழங்குகின்ற சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கையில், DIMO Academy அதன் ஆரம்பம் முதல் பங்களித்து வருகின்றது. இலங்கை இளைஞர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை வலுப்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகிய இரண்டையும் வளர்ப்பதற்கு இந்த செயற்பாடு பெரிதும் உதவியுள்ளது.
A-தர மதிப்பீடு பெற்ற ஜேர்மனிய பயிற்சிக் கல்வியகமான DIMO Academy, ஜேர்மன் தொழிற்கல்வியின் மிக உயர்ந்த தரத்தை பேணிப் பாதுகாக்க உறுதி பூண்டுள்ளது. அதற்கமைய, விசேட தெரிவு முறை மூலம் மாணவர் இணைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதோடு, விண்ணப்பதாரர்கள் அடிப்படைத் தகுதிகள் மற்றும் எழுத்துப் பரீட்சைகள் மற்றும் நேர்முகப் பரீட்சைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறார்கள். தொடர்ச்சியான மதிப்பீட்டுச் செயன்முறை மற்றும் தெரிவுகள் மூலம் மாணவர்களின் விசேடத்துவம் உறுதிப்படுத்தப்படுவதோடு, உயர் மட்டத்திலுள்ள பயிற்சி வழங்குனர்கள் ஜேர்மனிய தரத்திற்கு ஏற்ப அதனை முன்னெடுக்கின்றனர்.
1990 இல் ஸ்தாபிக்கப்பட்ட DIMO Academy ஆனது, 34 வருட நீண்ட வரலாற்றுடன், திறமையான தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்குவதில் பெரும் பங்காற்றி வருகிறது. DIMO Academy இன் தொலைநோக்குப் பார்வையானது, இலங்கைக்கு அப்பால் விரிவடைந்து, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் அறிவைப் பகிர்வதன் மூலம் அண்டை நாடுகளைச் சேர்ந்த மாணவர்களையும் கவரும் திட்டத்தை கொண்டுள்ளது. அத்துடன் கடல்சார் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் தொழிற்கல்வியை விரிவுபடுத்தவும் DIMO Academy எதிர்பார்க்கிறது.
DIMO Academy ஆனது, தொழில்முறை தகுதிகளை உருவாக்குவதற்கு மட்டுமான மற்றுமொரு கல்வி நிறுவனம் அல்ல என்பதோடு, மாணவர்களுக்கு வெற்றிப் பாதைகளை ஏற்படுத்துவதன் மூலம் இளைஞர், யுவதிகளின் கனவுகளை நனவாக்குவதற்கும், வெளிநாட்டில் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கும், ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் பங்களிப்பதில் தனது பங்களிப்பை தொடர்ச்சியாக வழங்கி அர்ப்பணிக்கும் ஒரு கல்வியகமாகும்.