Home » 50% வரை தள்ளுபடியுடன் Loyalty Rewards வாடிக்கையாளர் வெகுமதித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் HNB பொதுக் காப்புறுதி

50% வரை தள்ளுபடியுடன் Loyalty Rewards வாடிக்கையாளர் வெகுமதித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் HNB பொதுக் காப்புறுதி

by Rizwan Segu Mohideen
July 15, 2024 11:19 am 0 comment

பொதுக் காப்புறுதித் துறையில் முன்னணியில் உள்ள  பெயரான HNB General Insurance (பொதுக் காப்புறுதி), தனது விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பிரத்தியேகமான பலன்களை வழங்கும் அதன் Loyalty Rewards திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறது. இந்த திட்டமானது, பல்வேறு துறைகளில் குறிப்பிடும்படியான சேமிப்பு மற்றும் விசேட சலுகைகளை உறுதியளிக்கிறது.

இந்த சலுகையானது, 2024 ஜூன் 17 ஆம் திகதி ஆரம்பமானதோடு, இங்கு HNB பொதுக் காப்புறுதியானது, அதன் பல்வேறு சேவைகள் மற்றும் தயாரிப்புகளில் 50% வரை தள்ளுபடியை வழங்குகின்றது. வாகன உரிமையாளர்கள், குறிப்பாக, மின்கலம் மாற்றீடு மற்றும் பொதுவான வாகன சேவை போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான தள்ளுபடிகள் மூலம் அதிகளவான பலன்களைப் பெற முடியும். வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை எளிதாகவும், கட்டுப்படியயான விலையிலும் பராமரிக்க இந்த திட்டத்தின் மூலம் முடியும் என்பதை இது உறுதி செய்கிறது.

இதன் மூலம், வாடிக்கையாளர்கள் வாகனத் தேவைகளுக்கு அப்பால் ஹோட்டல்களில் தங்குதல், பயணங்களை மேற்கொள்ளல், கையடக்கத் தொலைபேசி உதிரிப் பாகங்களை கொள்வனவு செய்தல், மூக்குக் கண்ணாடி சேவைகளை பெறுதல் போன்ற விடயங்களில் ஒப்பிட முடியாத சலுகைகளை பெறலாம். இந்த குறிப்பிடும்படியான சேமிப்புடன் ஓய்வுகளை களிக்கவும், உலகத்தை ஆராயவும், சேவைகளை அணுகவும் இந்த திட்டத்தின் மூலம் வாய்ப்பாக அமைகிறது.

HNB General Insurance நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சித்துமின ஜயசுந்தர இது பற்றித் தெரிவிக்கையில், “நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும் எப்போதும் எமது வாடிக்கையாளர்களை மையமாக கொண்டே மேற்கொள்கின்றோம். இந்த Loyalty Rewards திட்டம் சாத்தியமான அனைத்து வழிகளிலும் அவர்களுக்கு வெகுமதிகளை வழங்குவதை உறுதி செய்வதற்கான எமது அர்ப்பணிப்பிற்கு ஒரு சான்றாகும். எமது வாடிக்கையாளர்களின் மிக அத்தியாவசிய தேவைகளை நாம் கவனமாக பரிசீலித்து, அவர்களது தேவைகளை நிறைவேற்றும் வணிக நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து, அவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் நாம் இந்த திட்டத்தை வடிவமைத்துள்ளோம்.” என்றார்.

HNB General Insurance நிறுவனத்தின் Chief Transformation Officer டில்ஷான் பெரேரா தெரிவிக்கையில், “Loyalty Rewards திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர் அனுபவத்தை தொடர்ச்சியாக மேம்படுத்துவதே எமது குறிக்கோளாகும். இவ்வாறான பல்வேறு தள்ளுபடிகளை வழங்குவதன் மூலமும் உயர்மட்ட வணிக பங்காளிகளுடன் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்குவதன் மூலமும் வாடிக்கையாளர்களுக்குள்ள தற்போதைய தேவைகளை மாத்திரம் நாம் பூர்த்தி செய்யாது, அவர்களது எதிர்கால தேவைகளையும் கருத்திற்கொண்டு, ஒப்பிட முடியாத பெறுமதியையும் சேவையையும் வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை இந்த திட்டம் பிரதிபலிக்கிறது.

HNB பொதுக் காப்புறுதி Loyalty Rewards திட்டமானது, புதிய வாடிக்கையாளர்களுக்கும் இந்த வாய்ப்பை வழங்குகின்றது. இதில் இணைய விரும்புவோர், இந்த பிரத்தியேக சலுகைகளை உடனடியாக பயன்படுத்தி பலன் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் HNB GI நிறுவனத்தின் ‘1303’ எனும் உடனடி தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் அல்லது www.hnbgeneral.com எனும் நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் மேலதிக தகவலை பெறலாம்.

HNB General Insurance பற்றி
HNB பொதுக் காப்புறுதியானது, இலங்கை முழுவதிலும் உள்ள தனிநபர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு வாகனம் முதல் வாகனம் அல்லாத மற்றும் தக்காபுல் தீர்வுகள் வரை பல்வேறு வகையான காப்புறுதித் தேவைகளை பூர்த்தி செய்கின்ற அர்ப்பணிப்புள்ள பங்காளியாகும். HNB Assurance PLC இன் துணை நிறுவனமமும், HNB குழுமத்தின் ஒரு அங்கத்தவருமான HNB General Insurance ஆனது, பரந்த அளவிலான கிளை வலையமைப்பின் மூலம் செயற்படுவதன் மூலம், நாடு முழுவதும் விரிவான சேவை வழங்கலை உறுதி செய்கிறது. Fitch Ratings Lanka Limited இன் ‘A- (lka)’ இன் காப்புறுதி நிதி வலிமை மதிப்பீட்டின் மூலம், புத்தாக்கம், சிறந்த உபசரிப்புடன், பங்குதாரர்களுக்கு நிலைபேறான மதிப்பை உருவாக்க HNB General Insurance உறுதி பூண்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x