Tuesday, October 15, 2024
Home » நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் 22.5% மின் கட்டண குறைப்பு

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் 22.5% மின் கட்டண குறைப்பு

- 10% குறைப்பே கோரப்பட்ட போதிலும் ஆணைக்குழு தலையீடு

by Rizwan Segu Mohideen
July 15, 2024 4:01 pm 0 comment

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் 22.5 வீதத்தால் மின் கட்டணத்தை குறைப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று தீர்மானித்தது. இந்த வருடத்திற்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் தொடர்பில் மின்சார சபை முன்வைத்த யோசனையை ஆராயப்பட்டதையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வீட்டுப்பாவனை, மத ஸ்தலங்கள், ஹோட்டல்கள், தொழிற்சாலைகள், பொது சேவைகள் மற்றும் அரச நிறுவனங்கள் என்ற அனைத்து நுகர்வோர் பிரிவுகளுக்கான மின் கட்டணங்கள் நாளை முதல் குறையவுள்ளன.

மின் கட்டண குறைப்பை 10 வீதத்திற்கு மட்டுப்படுத்துவது தொடர்பில் மின்சார சபை யோசனை முன்வைத்திருந்தது. எனினும் ஆணைக்குழுவினால் மொத்த மின் கட்டண குறைப்பு 22.5 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மத ஸ்தலங்களில் குறைந்த மின் பாவனை பிரிவுக்கென இதுவரைக் காலமும் அறவிடப்பட்ட ஒரு மின் அலகிற்கு அறவிடப்பட்ட 8 முதல் 9 ரூபா வரை கட்டண அறவீடு 6 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

வீட்டு பாவனை ஒரு அலகிற்கு நிலவும்
கட்டணம்
ஜூலை 16
முதல்
நிலவும்
மாதாந்த நிலையான கட்டணம்
ஜூலை 16
முதல்
30 அலகிற்கும் குறைவு ரூ. 8  ரூ. 6  ரூ. 150  ரூ. 100
31 – 60 அலகுகள் ரூ. 20  ரூ. 9  ரூ. 300  ரூ. 250
60 இற்கும் அதிக
அலகுகள்
0 – 60 அலகுகள் ரூ. 25  ரூ. 15
61-90 அலகுகள்  ரூ. 30  ரூ. 18  ரூ. 400  ரூ. 400
91-120 அலகுகள்  ரூ. 50  ரூ. 30  ரூ. 1,000  ரூ. 1,000
121-180 அலகுகள்  ரூ. 50  ரூ. 42 ரூ. 1,500  ரூ. 1,500
180 இற்கும் அதிக
அலகுகள்
ரூ. 75  ரூ. 65 ரூ. 2,000  ரூ. 2,000

மத ஸ்தலங்களில் அறவிடப்பட்ட மாதாந்த நிலையான கட்டணமும் அனைத்து பிரிவுகளுக்குமென குறைக்கப்பட்டுள்ளது.

மத தலங்கள் ஒரு அலகிற்கு நிலவும்
கட்டணம்
ஜூலை 16
முதல்
நிலவும்
மாதாந்த நிலையான கட்டணம்
ஜூலை 16
முதல்
30 அலகிற்கும் குறைவு ரூ. 8  ரூ. 6  ரூ. 150  ரூ. 100
31 – 90 அலகுகள் ரூ. 9  ரூ. 6  ரூ. 250  ரூ. 250
91-120 அலகுகள்  ரூ. 18  ரூ. 10  ரூ. 600  ரூ. 300
121-180 அலகுகள்  ரூ. 30 ரூ. 20 ரூ. 1,500  ரூ. 1,200
180 இற்கும் அதிக
அலகுகள்
ரூ. 43 ரூ. 30 ரூ. 2,000  ரூ. 1,600

PUCSL-15_07_2024-Tariff-Revision-1

இன்று நள்ளிரவு முதல் மின் கட்டணம் 21.9% ஆல் குறைப்பு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x