Home » மகளின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய தந்தை

மகளின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய தந்தை

- தந்தையின் செயலால் மகள் எடுத்த விபரீத முடிவு

by Prashahini
July 14, 2024 7:10 pm 0 comment

கர்நாடகாவில் 18 வயது மகளின் அந்தரங்க வீடியோக்களை தந்தையே சமூக வலைதளங்களில் பரப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையின் இந்த செயலை அறிந்து மகள் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் வைத்தியசாலையில் உயிருக்கு போராடி வருகிறார்.

இதனை தொடர்ந்து பெண்ணின் தாய் தனது கணவன் மீது பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரில், உறவினரின் பையனை மகள் காதலித்து வந்தது தனது கணவனுக்கு பிடிக்கவில்லை. எனவே அந்த பையனை வீட்டுக்கு அழைத்து வந்து அடித்து துன்புறுத்தி, அவனின் செல்போனில் உள்ள மகளின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை டவுன்லோடு செய்து சமூக வலைதளங்களில் தனது கணவர் பரப்பியுள்ளார்.

மேலும் தன்னையும் தனது மகளையும் தொடர்ந்து அடித்து துன்புறுத்தியதால் இருவருக்குமே காயங்கள் ஏற்பட்டுள்ளது.

தனது வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் மனமுடைந்த மகள் நேற்று பினாயில் குடித்து தற்கொலை செய்ய முயன்றாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகாரின் மீது பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT