மலேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அந்நாட்டு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் பின் ஹமிடியைச் சந்தித்தார்.
இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணன் முருகன் மற்றும் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஆகியோர் உடனிருந்தனர்.
சிங்கப்பூர் மணிமகுடம் நூல் வெளியீட்டு விழாவில் விசேட விருந்தினராக பங்கேற்பு
சிங்கப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் தினகரனின் அழைப்பின் பேரில் “சிங்கப்பூர் மணிமகுடம்” புத்தக வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் கலந்துக் கொண்டார்.
சிங்கப்பூர் தமிழவேல் நற்பணி மன்றம் மற்றும் டாக்டர் சேது இணைந்து ஏற்பாடு செய்திருந்த புத்தக வெளியீட்டு விழாவில் முதல் பிரதியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செந்தில் தொண்டமான் சிங்கப்பூரின் புத்திஜீவிகள் மன்றத்தில் உரையாற்றினார்.