Saturday, November 2, 2024
Home » வணிந்து ஹசரங்க T20 தலைமை பதவியிலிருந்து இராஜினாமா

வணிந்து ஹசரங்க T20 தலைமை பதவியிலிருந்து இராஜினாமா

- ஒரு வீரராக தொடர்ந்தும் அணியில் நீடிப்பார்

by Rizwan Segu Mohideen
July 11, 2024 6:11 pm 0 comment

இலங்கையின் தேசிய ஆடவர் T20 கிரிக்கெட் அணித்தலைவர் வனிந்து ஹசரங்க, தலைமைப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தலில் இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் நலன் கருதி, தலைமைப் பொறுப்புகளிலிருந்து விலகி, ஒரு வீரராக அணியில் நீடிக்க முடிவு செய்துள்ளதாக ஹசரங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணிக்கு ஒரு வீரராக எனது சிறந்த முயற்சிகளை எப்பொழுதும் வழங்குவேன் எனத் தெரிவித்துள்ள வணிந்து, நான் எப்போதும் போல் எனது அணிக்கும், தலைமைமைத்துவத்திற்கும் ஆதரவாக உடனிருப்பேன் என வணிந்து ஹசரங்க தனது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது இராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம், சர்வதேச கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் வணிந்து ஹசரங்க எமக்கு ஒரு முக்கிய தொடர்ந்தும் இருப்பார் என தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x