Home » கொழும்பில் இ.தொ.கா. ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

கொழும்பில் இ.தொ.கா. ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

- ரொஷான் ராஜதுறையின் உருவ பொம்மை எறிப்பு

by Prashahini
July 9, 2024 4:12 pm 0 comment

மலையக பெறுந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என கோரி பெருந்தோட்ட நிறுவன சம்மேளனத்தின் ஊடகத்துறை பேச்சாளர் ரொஷான் ராஜதுறையின் உருபொம்மையினை எரித்து இன்று (09) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டமானது, கொழும்பு 04இல் அமைந்துள்ள வஜிர வீதியில் உள்ள தோட்ட துறைமார் சம்மேளத்தின் கட்டடத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இலங்கை தொழிலாளர் காங்ரஸின் முக்கியஸ்தர்கள் மற்றும் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையின் பிரபல தொழில் அதிபரும் ஹேலிஸ் நிறுவனத்தின் பங்காளியும் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவின் வீட்டுக்கு முன்பாகவும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பினை வெளியிட்டனர்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் கஷ்டங்களையும், துயரங்களையும் அரியாது தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் வழங்க முடியாத தம்மிக்க பெரேரா எதிர்காலத்தில் இந்த நாட்டை எவ்வாறு முன்னெடுத்து சொல்லுவார் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கேல்வி எழுப்பினர்

ஆகவே இந்த பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளத்தை வழங்குவதில் இந்த பெருந்தோட்ட நிறுவனங்கள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய தொழில் அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்யும் நோக்கில் செயற்பட்டு கொண்டிருக்கிறது

எது எவ்வாறாக இருப்பினும் கடந்த முறை போன்று எமக்கு எவ்வாறு 1000 ரூபாய் சம்பளத்தை அமைச்சர் ஜீவன் தொண்டமான் பெற்றுகொடுத்தாரோ அதே போன்று இம்முறையும் 1700 ரூபாய் சம்பளத்தை அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிச்சயம் பெற்றுகொடுப்பார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என தெரிவித்தனர்

இதேவேளை வெளியேறு வெளியேறு கம்பனியே வெளியேறு, தொழிலாளியின் இரத்தத்தை உரிஞ்சாதே, முதலாளி வர்க்கமே தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பளத்தை கொடு போன்ற பதாதைகளையும், கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்

ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததோடு, கலகதடுப்பு பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள பிரச்சினைக்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் உரிய தீர்வினை வழங்காவிடின் எமது போராட்டம் வேறுவடிவத்தில் உறுவெடுக்குமென ஆர்பாட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x